என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஏடிஎம் கொள்ளை
நீங்கள் தேடியது "ஏடிஎம் கொள்ளை"
சோழிங்கநல்லூரில் ஏ.டி.எம். கொள்ளையன் பிடிபட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை:
காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் உள்ள தங்கும் விடுதியில் பல்கேரியா நாட்டை சேர்ந்த பீட்டர் (வயது 47) தனது நண்பருடன் தங்கி இருந்தார். நேற்று காலை அவர்கள் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு வெளியே வரும்போது அவர்களது பையில் இருந்து ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் இந்திய பணம் மற்றும் அமெரிக்க டாலர்கள் கீழே விழுந்தன. இதை பார்த்த விடுதி ஊழியர் சந்தேகத்தின் பேரில் பீட்டரை பிடித்து செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தார்.
அவருடன் தங்கி இருந்த அவரது நண்பர் தப்பி ஓடி விட்டார். போலீஸ் விசாரணையில் அவர்கள் போலியாக ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 50 போலி ஏ.டி.எம்.கார்டுகள், ரூ.10 லட்சம் இந்திய பணம், ரூ.3 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க பயன்படும் ‘ஸ்கிம்மர்’ கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
தப்பி ஓடிய அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். எந்தெந்த ஏ.டி.எம்.களில் அவர்கள் பணத்தை கொள்ளையடித்தனர்?. எவ்வளவு பணம் அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணியின் மணிபர்சை கொள்ளையடித்த மர்மநபர் அதில் இருந்த ஏ.டி.எம்.ஐ எடுத்து ரூ.35ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லால்குடி:
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழவாளாடி கபிரியேல்புரத்தை சேர்ந்தவர் முருகவேல், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (வயது 30). இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பிணியாகவும் உள்ளார்.
சம்பவத்தன்று மருத்துவ பரிசோதனைக்காக ரம்யா அவரது தாய் மற்றும் குழந்தையுடன் திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் பரிசோதனையை முடித்து விட்டு ஊருக்கு புறப்பட்டார். வீட்டிற்கு சென்றதும் அவர் பேக்கில் வைத்திருந்த மணிபர்சை பார்த்த போது அதனை காணவில்லை. அதில் ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.1000 பணம் இருந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த நின்ற போது, அவரது செல்போனுக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ்.தகவல் வந்து கொண்டிருந்தது.
அதில் முதலில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.10ஆயிரம், பின்னர் மறுமுறை ரூ.10ஆயிரம், அடுத்து ரூ.10ஆயிரம், ரூ.5ஆயிரம் என ரூ.35ஆயிரம் எடுக்கப்பட்டதற்கான தகவல் வந்தது.
ரம்யாவின் வங்கி கணக்கில் ரூ. 43 ஆயிரம் வரை இருந்தது. அதில் ரூ.35 ஆயிரம் பணம் எடுத்ததற்கான தகவல் வந்ததையடுத்து மேலும் அதிர்ச்சியடைந்தார்.
உடனே வங்கிக்கு விரைந்து சென்று,அதிகாரிகளிடம் நடந்த விவரத்தை கூறி, வங்கி கணக்கை பிளாக் செய்தார். பின்னர் லால்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில், ரம்யா திருச்சிக்கு சென்று விட்டு பஸ்சில் திரும்பும் போது, மர்மநபர் மணிபர்சை திருடியுள்ளது தெரியவந்தது. ஏ.டி.எம். எண் ஞாபகத்திற்காக ரம்யா ஒரு தாளில் பின் நம்பரை எழுதி மணிபர்சில் வைத்திருந்தார். அது, ஏ.டி.எம்.கார்டை திருடிய மர்மநபருக்கு எளிதாக அமைந்துவிட்டது. அதன் மூலம் அவர் ரம்யா வங்கி கணக்கில் இருந்த பணத்தை அபேஸ் செய்துள்ளார். மேலும் அந்த மர்மநபர் மாந்துறையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை எடுத்துள்ளார்.
இதனால் அந்த ஏ.டி.எம். மைய கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர். பணத்தை அபகரித்த மர்மநபரை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள ஏடிஎம் முன் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பீகாரை சேர்ந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தபோது, நூதன முறையில் ரூ.1½ லட்சம் வரை கொள்ளையத்திருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை:
மெரினா கடற்கரையையொட்டியுள்ள எழிலகம் வளாகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் மர்ம கும்பல் ஒன்று இந்த ஏ.டி.எம். எந்திரத்தை மட்டும் குறிவைத்து கைவரிசை காட்டியது. இது தொடர்பாக 5 பேர் அடுத்தடுத்து அண்ணாசதுக்கம் போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் செல்வ நாகரத்தினம் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம், அண்ணா சதுக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோரது தலைமையில் ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், போலீஸ்காரர்கள் சங்கர், சக்தி, சதாசிவம், சாமி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். அருகே ரகசியமாக கண்காணித்தனர்.
அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொள்ளையர்கள் 2 பேரும் பீகாரில் இருந்து விமானத்தில் வந்து கொள்ளையடித்தது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்ட கொள்ளையர்கள் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் சிலர் பணத்தை எடுத்து முடித்த பின்னர் தங்களது ஏ.டி.எம். செயல்பாட்டை முழுமையாக முடிக்காமல் (கேன்சல் செய்வது வரை) செல்வார்கள். இதுபோன்ற நபர்களை கண்காணிப்பதற்காக திடீரென ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று விடுவோம்.
2 பேரில் ஒருவர் அருகில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதுபோல நடிப்போம். அப்போது ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளரின் ரகசிய குறியீட்டு எண்ணை எப்படியாவது கண்டுபிடித்து விடுவோம்.
ஏ.டி.எம்.மில் முழுயையாக செயல்பாட்டை முடிக்காமல் செல்லும் நபர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டு பின்நம்பரை மீண்டும் போட்டு பணத்தை எடுப்போம். இதுபோன்று ரூ.1½ லட்சம் வரையில் பணம் எடுத்துள்ளோம்.
இவ்வாறு கொள்ளையர்கள் கூறியுள்ளனர்.
இந்த பணத்தை கொள்ளையர்களில் ஒருவன் தனது தாயின் வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களிடம் இருந்து போலி ஏ.டி.எம். கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று சென்னையில் வேறு எந்த ஏ.டி.எம். மையத்திலாவது இருவரும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் பணியாற்றும் கூடுதல் டி.ஜி.பி. ஒருவரின் அலவலக ஊழியரான சீனிவாசன் என்பவர் ரூ.30 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். ராணுவ வீரர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து கொள்ளையர்கள் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர்.
பழைய ஏ.டி.எம். எந்திரங்களில் மட்டுமே இதுபோன்று நூதன முறையில் பணம் எடுக்க முடியும் என்று கொள்ளையர்கள் அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளனர்.
சிந்தாதிரிப்பேட்டையில் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஏ.டி.எம். எந்திரம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். போன்று பழைய ஏ.டி.எம். என்றும் கொள்ளையர்கள் கூறியுள்ளனர். எனவே அங்கும் கைவரிசை காட்டப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே இது போன்ற ஏ.டி.எம். எந்திரங்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பீகார் கொள்ளையர்கள் கடந்த 4 மாதங்களில் பலரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் புகார் அளிக்கவில்லை. இதன் மூலம் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையர்கள் சுருட்டி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மெரினா கடற்கரையையொட்டியுள்ள எழிலகம் வளாகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் மர்ம கும்பல் ஒன்று இந்த ஏ.டி.எம். எந்திரத்தை மட்டும் குறிவைத்து கைவரிசை காட்டியது. இது தொடர்பாக 5 பேர் அடுத்தடுத்து அண்ணாசதுக்கம் போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து திருவல்லிக்கேணி துணை கமிஷனர் செல்வ நாகரத்தினம் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம், அண்ணா சதுக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோரது தலைமையில் ஏ.டி.எம். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், போலீஸ்காரர்கள் சங்கர், சக்தி, சதாசிவம், சாமி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். அருகே ரகசியமாக கண்காணித்தனர்.
இந்த நிலையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த பீகார் கும்பல் ஒன்று தனிப்படை போலீசிடம் சிக்கியது. அவர்களது பெயர் முன்னுகுமார், மனோகர்குமார் என்பது தெரிய வந்தது.
பிடிபட்ட கொள்ளையர்கள் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் சிலர் பணத்தை எடுத்து முடித்த பின்னர் தங்களது ஏ.டி.எம். செயல்பாட்டை முழுமையாக முடிக்காமல் (கேன்சல் செய்வது வரை) செல்வார்கள். இதுபோன்ற நபர்களை கண்காணிப்பதற்காக திடீரென ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று விடுவோம்.
2 பேரில் ஒருவர் அருகில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதுபோல நடிப்போம். அப்போது ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளரின் ரகசிய குறியீட்டு எண்ணை எப்படியாவது கண்டுபிடித்து விடுவோம்.
ஏ.டி.எம்.மில் முழுயையாக செயல்பாட்டை முடிக்காமல் செல்லும் நபர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டு பின்நம்பரை மீண்டும் போட்டு பணத்தை எடுப்போம். இதுபோன்று ரூ.1½ லட்சம் வரையில் பணம் எடுத்துள்ளோம்.
இவ்வாறு கொள்ளையர்கள் கூறியுள்ளனர்.
இந்த பணத்தை கொள்ளையர்களில் ஒருவன் தனது தாயின் வங்கி கணக்கில் போட்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்களிடம் இருந்து போலி ஏ.டி.எம். கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று சென்னையில் வேறு எந்த ஏ.டி.எம். மையத்திலாவது இருவரும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் பணியாற்றும் கூடுதல் டி.ஜி.பி. ஒருவரின் அலவலக ஊழியரான சீனிவாசன் என்பவர் ரூ.30 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். ராணுவ வீரர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து கொள்ளையர்கள் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர்.
பழைய ஏ.டி.எம். எந்திரங்களில் மட்டுமே இதுபோன்று நூதன முறையில் பணம் எடுக்க முடியும் என்று கொள்ளையர்கள் அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளனர்.
சிந்தாதிரிப்பேட்டையில் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஏ.டி.எம். எந்திரம் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். போன்று பழைய ஏ.டி.எம். என்றும் கொள்ளையர்கள் கூறியுள்ளனர். எனவே அங்கும் கைவரிசை காட்டப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே இது போன்ற ஏ.டி.எம். எந்திரங்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பீகார் கொள்ளையர்கள் கடந்த 4 மாதங்களில் பலரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் புகார் அளிக்கவில்லை. இதன் மூலம் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையர்கள் சுருட்டி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.6.5 லட்சம் கொள்ளையடித்து சென்ற 8 பேரை கைது செய்ய கோவை வந்த தெலுங்கானா போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கோவை:
கோவை பீளமேட்டில் கடந்த டிசம்பர் மாதம் 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.31 லட்சம் கொள்ளையடித்த வட மாநிலங்களை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த மோசம் கான்(34), முபாரக் (30), சுபைர்(19), அரியானாவை சேர்ந்த சுபைர்(33), அமின்(34), அமித்குமார்(30), உத்தரபிரதேசத்தை சேர்ந்த முஸ்தாக்(32), பீகாரை சேர்ந்த ஜூல்பிகர்(25) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டியதை ஒப்புக் கொண்டனர். இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட ராஜஸ்தானை சேர்ந்த அஸ்லாமுதீனை ஜெய்ப்பூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இந்தகும்பல் தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகரில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.6.5 லட்சத்தை கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டனர். இது குறித்து கோவை மாநகர போலீசார் தெலுங்கானா போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் அவர்கள் 8 பேரையும் கைது செய்வதற்காக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் நேற்று கோவை வந்தனர். ஜெயிலுக்கு சென்ற அவர்கள் ஏ.டி.எம். கொள்ளையர்கள் 8 பேரையும் கைது செய்து தெலுங்கானா கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து செல்வதற்கான ஆவணங்களை காட்டினர்.
இதைப்பார்த்த ஜெயில் அதிகாரிகள், உங்களது அடையாள அட்டை மற்றும் ஏ.டி.எம். கொள்ளையர்கள் கைது குறித்த ஆவணங்களை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காட்டி சரி பார்த்து வருமாறு கூறி அனுப்பினர். அதன்பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர்.
பின்னர் தெலுங்கானா போலீஸ் அதிகாரிகளை கோவை மாநகர போலீசார் தொடர்பு கொண்டு பேசியதில் வந்தது தெலுங்கானா போலீசார் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தெலுங்கானா போலீசார் மீண்டும் ஜெயிலுக்கு சென்று ஆவணங்களை காட்டினர்.
ஏ.டி.எம். கொள்ளையர்கள் 8 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் மீதான வழக்கு நாளை மறுநாள்(17-ந் தேதி) கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் 8 பேரையும் தெலுங்கானா கோர்ட்டுக்கு அனுப்புவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.
எனவே ஏ.டி.எம். கொள்ளையர்களை அனுப்புவதற்கு மேலும் சில ஆவணங்கள் தேவை என ஜெயில் அதிகாரிகள் கூறினர். இதனால் தெலுங்கானா போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.#tamilnews

×

X